மாநிலங்களவையில் ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கூறியதாவது, கவுண்டரில் வாங்கிய ரயில் பயண சீட்டுகளை IRCTC இணையதளம் வாயிலாகவோ அல்லது 139 என்ற எண்ணை தொடர்பு கொண்டோ பயணிகள் ரத்து செய்து கொள்ளலாம். ஆனால் பயண சீட்டு கட்டணத்தை திரும்ப பெற பயணிகள் முன்பதிவு மையத்திற்கு தான் செல்ல வேண்டும் என கூறியுள்ளார்.