
சென்னையில் நாளுக்கு நாள் மக்கள் தொகை அதிகரித்து வரும் நிலையில் மறுபக்கம் குப்பைகளும் அதிகரிக்க தொடங்கி விட்டது. அதனை முறையாக அப்புறப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கையை எடுக்க உள்ளதாக சென்னை கமிஷனர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கடந்த 2001 ஆம் ஆண்டு சென்னையில் ஒரு நாளைக்கு 2500 டன் குப்பைகள் கையாளப்பட்ட நிலையில் தற்போது 6150 டன் அதிகரித்துள்ளது. ஆனால் மாநகராட்சியர் தினசரி 1800 டன் கழிவுகளை மட்டுமே கையாள முடிவதால் குப்பைகளை கிடங்குகளில் கொட்டுவது மட்டுமல்லாமல் அதனை உரிய முறையில் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் தற்போது உள்ள இடங்களில் குப்பைகளில் இருந்து உரத்தை தயாரிக்கும் பணிகள் நடைபெற்று. நம்ம ஊரு அறக்கட்டளை என்ற பெயரில் புதுப்பேட்டை மற்றும் கண்ணம்மாபேட்டை போன்ற பகுதிகளில் மாநகராட்சி இடம் இருந்து 30 டன் குப்பைகளை பெற்று அதிலிருந்து சுமார் பத்து டன் உரத்தை உற்பத்தி செய்யும் வரும் நிலையில் இந்த உரம் கிலோ 7 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது. இந்த திட்டம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.