இந்தியாவில் வங்கிகள் மற்றும் அஞ்சல் அலுவலகங்கள் என அனைத்திலும் அரசு மூலமாக பொதுமக்களுக்கு ஏராளமான சேமிப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி டாப் 10 சேமிப்பு திட்டம் குறித்த பட்டியலை இந்த பதிவில் பார்க்கலாம்.

தேசிய சேமிப்பு திட்டத்தில் தனி நபர் ஒருவர் 1000 ரூபாய் முதல் ஒன்பது லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்து சேமிக்கலாம். இதில் 5 ஆண்டு முதிர்ச்சி காலத்தில் அடிப்படையில் 7.4 சதவீதம் வட்டி விகிதம் வழங்கப்படும்.

தேசிய சேமிப்பு டைம் டெபாசிட் திட்டத்தில் குறைந்தது ஆயிரம் ரூபாய் முதல் அதிகபட்சம் விருப்பப்பட்ட தொகையில் முதலீடு செய்ய முடியும். இதில் அதிகபட்சமாக 7.5 சதவீதம் வரை வட்டி வழங்கப்படும்.

ஐந்து ஆண்டுகள் முதிர்ச்சி காலம் கொண்ட மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தில் குறைந்தது ஆயிரம் ரூபாய் முதல் 30 லட்சம் ரூபாய் வரை தனிநபர் சேமிக்க முடியும். இதற்கு எட்டு புள்ளி இரண்டு சதவீதம் வட்டி வழங்கப்படும்.

அடுத்ததாக ஐந்து வருடங்கள் முதிர்ச்சி காலம் கொண்ட தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டத்தில் குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாய் டெபாசிட் செய்ய முடியும். இதற்கு 7.5 சதவீதம் பட்டி வழங்கப்படுகிறது.

ஐந்து ஆண்டுகள் முதிர்வு காலம் கொண்ட பப்ளிக் பிராவிடண்ட் பண்ட் திட்டத்தில் குறைந்தபட்சம் 500 ரூபாய் முதல் அதிகபட்சம் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் வரை டெபாசிட் செய்ய முடியும். இதில் 7.1% வட்டி வழங்கப்படுகிறது.

அடுத்தது 21 ஆண்டுகள் முதிர்வு காலம் கொண்ட சுகன்யா சம்ரித்யா அக்கவுண்ட் திட்டத்தில் குறைந்த பட்சம் வருடத்திற்கு 250 முதல் வருடத்திற்கு 1.5 லட்சம் வரை சேமிக்கலாம். இதற்கு எட்டு சதவீதம் வரை வட்டி வழங்கப்படும்

அடுத்தது இரண்டு ஆண்டு முதிர்வு காலம் கொண்ட மகிலா சம்மன் சேமிப்பு சான்றிதழ் திட்டத்தில் இரண்டு லட்சம் ரூபாய் வரை டெபாசிட் செய்யும் நிலையில் 7.5 சதவீதம் வரை வட்டி வழங்கப்படும்.

கிசான் பிகாஸ் பத்திரத்திட்டத்தில் குறைந்தது ஆயிரம் ரூபாய் முதல் டெபாசிட் செய்யும் நிலையில் இதில் வாடிக்கையாளர்களுக்கு முதிர்வு காலத்தில் பணம் இரட்டிப்பாக வழங்கப்படுவது மட்டுமல்லாமல் வருடத்திற்கு 7.5 சதவீதம் வட்டி வழங்கப்படும்.

ஐந்து ஆண்டுகள் முதிர்வு காலம் கொண்ட ரெக்கரிங் டெபாசிட் அக்கவுண்ட் திட்டத்தில் மாதம் 100 ரூபாய் செலுத்தும் படியான சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு 6.5 சதவீதம் வட்டி வழங்கப்படும்.

போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு கணக்கு திட்டத்தில் குறைந்தது 500 ரூபாய் முதல் விருப்பத்தின் பெயரில் டெபாசிட் செய்யலாம். இதற்கு நான்கு சதவீதம் வட்டி வழங்கப்படும்.