டெல்லியில் உள்ள தெற்காசிய பல்கலைக்கழகத்தில் மகா சிவராத்திரி பண்டிகையின் போது மாமிசம் சாப்பிட்டது தொடர்பாக மாணவர்கள் குழுக்கள் இடையே பிரச்சனை ஏற்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதாவது இடதுசாரி மாணவர் அமைப்பான SFI மற்றும் வலதுசாரி மாணவர் அமைப்பான ‌ ABVP உறுப்பினர்களிடையே பெரும் மோதல் வெடித்தது. இதில் ஏபிவிபி மாணவர்கள் சிவராத்திரி பண்டிகை என்பதால் யாரும் அசைவ உணவு சமைக்க கூடாது மற்றும் சாப்பிடக்கூடாது என்று கூறியுள்ளனர்.

இதனை மீறி எஸ்எஃப்ஐ மாணவர் அமைப்பினர் அசைவம் சாப்பிட்டதால் அவர்களை அடித்து தாக்கியுள்ளனர். இதனால் பதிலுக்கு அவர்களும் தாக்கியுள்ள நிலையில் இது தொடர்பாக எஸ்எப்ஐ மாணவர் அமைப்பினர் அறிக்கை வெளியிட்டனர். அதில், அந்த அமைப்பைச் சேர்ந்த குண்டர்கள் அசைவம் சாப்பிட்டுக் கொண்டிருந்த மாணவிகளின் தலைமுடியை பிடித்து இழுத்து கொடூரமாக தாக்கினர். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இருக்கிறது. மேலும் இது குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.