கொல்கத்தாவில் மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த வழக்கில் சஞ்சய்ராய் என்பவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் நாடு முழுவதும் குற்றவாளிக்கு கடுமையான தண்டனைகள் வழங்க வேண்டும் என பல தரப்பினரும் வலியுறுத்தி வருகிறார்கள். குறிப்பாக  பிரபலங்கள் பலரும்  இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் மருத்துவர் பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்கு இந்திய கிரிக்கெட் வீரர் சூரியகுமார் யாதவ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அதில் உங்கள் மகளை பாதுகாப்பாக வைத்திருங்கள் என்ற வாக்கியம் அடிக்கப்பட்டு உங்கள் மகனுக்கும், சகோதரர்களுக்கும், கணவன்மார்களுக்கும், உங்கள் அப்பாவுக்கும், ஆண் நண்பர்களுக்கும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை செய்யாமல் இருங்கள் என்று கற்றுக் கொடுங்கள் என்று பதிவிட்டுள்ளார். மேலும் சூரிய குமாரின் பின் இந்த பதிவை ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகிறார்கள்.