மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வரும் நிலையில் இந்திய அணி முதல் சுற்றிலையே போட்டியிலிருந்து வெளியேறியுள்ளது. கடந்த 5-ம் தேதி உலகக்கோப்பை போட்டிகள் தொடங்கிய நிலையில் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளிடம் இந்தியா தோல்வியை சந்தித்ததால் அரையிறுதிக்கு முன்னேறாமல் முதல் சுற்றில் வெளியேறியது.

இந்திய மகளிர் அணியின் கேப்டனாக ஹர்மன் பிரீத் கவுர் இருக்கிறார். இந்நிலையில் இந்திய அணி தோல்வியை சந்தித்ததன் காரணமாக தற்போது பிசிசிஐ மகளிர் அணியின் கேப்டனை மாற்ற முடிவு செய்துள்ளதாக ஒரு புதிய தகவல் வெளிவந்துள்ளது. கேப்டன் ஹர்மன் பிரீத் கவுர் அணியின் முக்கிய வீராங்கனை அக தொடர்ந்து இருப்பார் என்று கூறும் பிசிசிஐ அதே சமயத்தில் அணியை உற்சாகமாக வழி நடத்துவதற்காக புதிய கேப்டனை தேர்வு செய்ய முடிவு செய்துள்ளது. மேலும் இது குறித்தான அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது