
தமிழக அரசு பெண்களின் நலனில் மிகவும் அதிக கவனம் செலுத்துகிறது. அதன்படி கைம்பெண்கள், மகளிர் சுய உதவி குழுக்கள், பள்ளி, கல்லூரிகளில் பயிலும் பெண்கள் என அனைத்து தரப்பு பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த அரசு தொடர்ந்து பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு மகளிருக்கும் வழங்கப்படும் மாதம்தோறும் ரூபாய்1000 வழங்கும் திட்டத்தை தமிழக அரசு கடந்த 2023 ஆம் ஆண்டு தொடங்கி ஒவ்வொரு பெண்களின் வங்கி கணக்கிலும் வரவு வைத்து வருகிறது.
இந்த நிலையில் மாதம் தோறும் வழங்கப்படும் ஊக்கத் தொகையை ரூபாய் 2000 ஆக உயர்த்த வேண்டும். எந்தவித விதிமுறை இன்றி அனைவருக்கும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து தமிழக அரசிடம் வைக்கப்படுகிறது. இதன் அடிப்படையில் தமிழக ஆளும் கட்சியான திமுக அரசு வரும் தேர்தலை முன்னிட்டு இந்த மாதந்தோறும் வழங்கும் ஊக்கத்தொகையை ரூபாய் 2000 ஆக அதிகப்படுத்தி அனைத்து தரப்பு பெண்களுக்கும் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.