பிரபல நடிகர், இயக்குனர் என பன்முக திறமை கொண்டவர் டி.ராஜேந்திரன். உடல் நலக்குறைவு காரணமாக கடந்த சில நாட்களாக வெளிநாட்டில் சிகிச்சை பெற்று வந்தார். கூலி படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கள் பாடலை டி.ராஜேந்தர் பாடி அசத்தியுள்ளார்.

இந்த நிலையில் நடிகர் கிங் காங் தனது மகளின் திருமணம் ஜூலை 10ஆம் தேதி அசோக் பில்லர் அருகே இருக்கும் பிரம்மாண்ட எம்கேபி திருமண மண்டபத்தில் மண்டபத்தில் நடைபெற உள்ளது. முன்னணி நடிகர்களான விஜய் ரஜினிகாந்த் உள்ளிட்ட பலருடன் இணைந்து நடித்தவர் கிங்காங். இவர் தனது மகளின் திருமண அழைப்பிதழை டி.ராஜேந்திரரிடம் கொடுத்தார்.

அப்போது ராஜேந்தர் கூறியதாவது, சிறுவயதில் இருந்தே உன்னோட நடிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும். நான் ஒரு படம் பண்ண போறேன். அதில் ஒரு சின்ன கேரக்டர் தருகிறேன் நீ நடிக்கிறாயா? என கேட்டுள்ளார். அதைக் கேட்டதும் மகிழ்ச்சியில் கிங்காங் கண்டிப்பாக நடிக்கிறேன் என கூறியுள்ளார்.