
பணம் திருப்பித் தராத காரணத்தால் ஏற்பட்ட கோபத்தில், ஒருவர் தனது உறவினரின் வீட்டிற்கு பெட்ரோல் ஊற்றி தீ வைத்த அதிர்ச்சிகரமான சம்பவம் பெங்களூருவில் நடந்தது. இந்த சம்பவம் ஜூலை 1-ம் தேதி மாலை 5.30 மணியளவில் நடந்திருப்பதாக கூறப்படுகிறது. சம்பவம் நடந்த வீடு வெங்கடரமணி மற்றும் அவரது மகன் சதீஷுக்கு சொந்தமானது.
இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். பவார்த்தி என்பவர் தனது மகள் மகாலட்சுமியின் திருமணத்திற்காக கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் வெங்கடரமணியிடமிருந்து ரூ.5 லட்சம் கடன் பெற்றிருந்தார். பலமுறை கேட்டும் பணம் திருப்பி தரப்படாத நிலையில், சமீபத்தில் நடந்த ஒரு திருமண விழாவில் மீண்டும் இந்த விஷயம் குறித்து வாக்குவாதம் ஏற்பட்டது.
उधार के ₹5 लाख बने आगजनी की वजह, रिश्तेदारों ने घर फूंका, CCTV में कैद हुई वारदात
बेंगलुरु में पारिवारिक विवाद ने हिंसक रूप ले लिया जब ₹5 लाख के पुराने कर्ज को लेकर महिला के घर में पेट्रोल डालकर आग लगा दी गई. 1 जुलाई की शाम हुई यह घटना CCTV में रिकॉर्ड हुई है. आरोप है कि… pic.twitter.com/DDAZNLuVro
— AajTak (@aajtak) July 4, 2025
அன்று மாலை, வீட்டில் சதீஷின் தாயார் மற்றும் சகோதரர் மோகன் தாஸ் உள்ளே இருந்த போது, யாரோ ஒருவர் வளாகத்திற்குள் நுழைந்து, கதவு, ஜன்னல், ஷூ ஸ்டாண்ட் போன்ற பகுதிகளில் பெட்ரோல் ஊற்றி தீ வைக்கிறார். அருகில் இருந்தவர்கள் தீயை கவனித்து உடனடியாக தீயை அணைத்ததால் காரணமாக, யாருக்கும் உயிர் சேதம் ஏற்படவில்லை. ஆனால் வீடு ஓரளவுக்கு சேதமடைந்துள்ளது.
பின்னர் வெளியாகிய சிசிடிவி காட்சிகளில், பவார்த்தியின் சகோதரரான சுப்பிரமணி என்ற நபர், மாலை 5.21 மணிக்கு பெட்ரோல் பாட்டிலுடன் வீட்டில் நுழைந்து, பெட்ரோலை ஊற்றி, தீப்பெட்டி மூலமாக தீவைத்ததும் பதிவாகியுள்ளது. தற்போது போலீசார் அவரை கைது செய்ய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.