மகரம் ராசி அன்பர்களே,

இன்று காலையில் கொஞ்சம் கலகலப்பு மாலையில் சலசலப்பு ஏற்படும். குடும்பத்தாரின் ஆலோசனை கேட்டு நடப்பது நல்லது. மறதி அதிகரிக்கும். வீட்டு வேலைகளை செய்யும் சூழல் உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். சூழ்நிலை கருத்தில் கொண்டு முடிவெடுக்க வேண்டும். பண வரவு சீராக இருக்கும்.

மற்றவர்கள் செய்ய தயங்கும் வேலையை சிறப்பாக செய்து முடித்து பாராட்டுகளை பெறுவீர்கள். பெண்கள் இன்று கவனமாக பணிகளை மேற்கொள்ள வேண்டும். எடுக்கும் முயற்சிகளில் முன்னேற்றம் இருக்கும். எந்த காரியத்திலும் சிந்திக்காமல் ஈடுபட வேண்டாம். யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். கேலி கிண்டல் பேச்சுக்கு உள்ளாக்க வேண்டாம். திட்டம் தீட்டி பணிகளில் ஈடுபடுவது நல்லது.

இன்று மாணவர்கள் பொறுப்புடன் நடந்து கொள்வீர்கள். வாழ்க்கை மிகவும் சுவாரஸ்யமாக செல்லும். பெரியவர்களுக்கு மதிப்பு கொடுங்கள். பெற்றோரிடம் கோபப்பட வேண்டாம். இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுத்துவிட்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிர்ஷ்ட எண்: மூன்று, ஆறு மற்றும் ஒன்பது

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் மஞ்சள் நிறம்