உத்திர பிரதேசம் மாநிலம் பகதூர் ஊரைச் சேர்ந்தவர் குமார். இவர் ராணுவத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி மாயாதேவி(50). இந்த தம்பதியினருக்கு ஒரு மகள் உள்ளார். கடந்த பத்தாம் தேதி மாயாதேவி காவல் நிலையத்திற்கு சென்று பீகாரில் உள்ள பக்சர் ரயில் நிலையத்திலிருந்து மகளை அழைத்து வருவதற்காக சென்ற எனது கணவர் வீட்டிற்கு திரும்பி வரவில்லை என புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் மாயாதேவயிடம் விசாரணை நடத்திய போது அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளார். தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் குமாரை கொலை செய்ததை மாயாதேவி ஒப்புக்கொண்டார். மாயாவிக்கும் அணில் குமார் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது.

இதற்கு இடையூறாக இருந்த குமாரை மாயாதேவி அணில் குமாருடன் சேர்ந்து கொலை செய்துள்ளார். பின்னர் அவர்கள் உடலை 6 துண்டுகளாக வெட்டி ஆற்றங்கரையில் வீசியது தெரியவந்தது. மாயாதேவி, அணில் குமார் அவர்களுக்கு உடந்தையாக இருந்த 2 பேர் என மொத்தம் நான்கு பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.