2024 ஆம் ஆண்டு மிகப்பெரிய எதிர்பார்ப்புக்குரிய திரைப்படங்களில் இந்தியன் 2 திரைப்படமும் ஒன்று. இந்த திரைப்படத்தை பிரமாண்ட இயக்குனர் சங்கர் இயக்கியுள்ள நிலையில் தயாரித்துள்ளது. இதில் சித்தார்த், எஸ் ஜே சூர்யா, விவேக் மற்றும் பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த திரைப்படம் வருகின்ற ஜூலை 12ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. இந்த நிலையில் இப்படத்தின் பிரீ புக்கிங்கில் மட்டும் உலக அளவில் 2.25 கோடி வரை வசூல் செய்துள்ளது. மேலும் வட அமெரிக்காவில் 1.65 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.