தபால் அலுவலகம் மூலம் வழங்கப்படும் பொது வருங்கால வைப்புநிதி (பிபிஎஃப்), தேசிய சேமிப்புச் சான்றிதழ் (என்எஸ்சி), தபால் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டம் (பிஓஎம்ஐஎஸ்) ஆகிய திட்டங்களில் முதலீடு செய்துள்ள முதலீட்டாளர் இறந்து விட்டால் அத்தொகையை கிளைம் செய்வதற்கான புது வழிகாட்டுதல் நெறிமுறைகளை அரசாங்கம் வெளியிட்டு உள்ளது. டெபாசிட் செய்தவர் இறந்த 6 மாதங்களுக்கு பின், உரிமை கோருபவர் கோரிக்கை படிவம் மற்றும் இறப்பு சான்றிதழை சமர்ப்பித்து ரூபாய்.5 லட்சத்தை திரும்பப் பெற முடியும்.

குறிப்பிட்ட காலத்துக்குள் இறந்த உரிமை கோரல் வழக்குகளை தபால் அலுவலகங்கள் சரி செய்துவிட வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது. இறந்த உரிமைக்கோரல் வழக்கு, கேஒய்சி ஆவணங்கள் பெறப்படும்போது உரிமை கோருபவரின் கேஒய்சி ஆவணமானது, அசல் கேஒய்சி ஆவணங்கள் உடன் சரிபார்க்கப்படும். கேஒய்சி ஆவணங்களின் நகலில் சாட்சிகளின் கையொப்பம் இருப்பின், நேரில் சாட்சியாளர் வர வேண்டிய தேவையில்லை.

உரிமை கோருபவர் அவரது வங்கிக்கணக்கு, பிஓ சேமிப்புக் கணக்கு விபரத்தை, பணப் பரிமாற்றத்துக்கான இறப்புக் கோரிக்கை வழக்கைச் சமர்ப்பிக்கவும். காசோலை வாயிலாக பணம் பெறுவதற்கு நாமினி தபால் அலுவலகம் போக வேண்டியதில்லை. இறந்த உரிமை கோரல் வழக்குகளை தீர்ப்பதற்காக துணை அஞ்சல் அலுவலகம், தலைமை அஞ்சல் அலுவலகம் வாயிலாக தனித் தனியான அனுமதி மெமோ எதுவும் வழங்கப்படாது.

இறந்தவரின் உரிமைக் கோரல் வழக்கு முழுமையான ஆவணங்களுடன் பெறப்பட்டதும், PRI (P)/SDI (P) வாயிலாக மேலும் சரிபார்ப்பு தேவையில்லை. அனைத்து போஸ்ட் ஆபிஸ்களும், பரிந்துரைக்கப்பட்ட காலக்கெடு, விதிமுறைகளின் படி வேலை நாட்களில் இறந்து போனவர்களின் கிளைம் வழக்குகளைத் தீர்க்க வேண்டும்.