திருப்பதி வெங்கடா ஜலபதியை விரைவில் தரிசிக்க திட்டமிட்டு இருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியிருக்கிறது. திருப்பதி கோயிலை நிர்வகிக்கும் அறக்கட்டளையான திருப்பதி தேவஸ்தானம் (டிடிடி), தரிசனத்துக்குரிய ஆன்லைன் டிக்கெட் புக்கிங் வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது. தற்போது திருப்பதி சிறப்பு தரிசனத்துக்கு எப்படி டிக்கெட் முன் பதிவு செய்ய வேண்டும் என்பது பற்றி இங்கே தெரிந்துகொள்வோம்.

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ மான இணையமான tirupatibalaji.ap.gov.in.க்கு போக வேண்டும். தற்போது ஆன்லைன் முன்பதிவு ஆப்ஷனை தேர்வு செய்து, டிடிடி தர்ஷன் புக்கிங் ஆன்லைன் என்பதனை தேர்ந்தெடுக்க வேண்டும். மின் அஞ்சல் ஐடி மற்றும் பாஸ்வேர்டை உள்ளிட்டு ஒரு கணக்கை உருவாக்கி, பிறகு சமர்ப்பி ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.

அதன்பின் தேவையான விபரங்கள் மற்றும் ஆவணங்களை சேர்த்து டிடிடி டிக்கெட்டுகளுக்கான ஆன்லைன் முன் பதிவு படிவத்தை நிரப்ப வேண்டும். கிரெடிட் கார்டுகள், டெபிட் கார்டுகள் (அ) நெட் பேங்கிங் ஆகிய ஆன்லைன் சேவைகள் வாயிலாக நீங்கள் பணம் செலுத்தலாம். பணம் செலுத்தியதும், ரூபாய்.300 டிடிடி டிக்கெட்டை மின் அஞ்சல் (அ) டிடிடி இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம்.