தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் சென்னையில் உள்ள பழவந்தாங்கல் பகுதியில் அந்தக் கட்சியினர் விஜய் படத்துடன் கூடிய புத்தாண்டு வாழ்த்து போஸ்டரை ஒட்டுவதற்காக சென்றுள்ளனர். அப்போது போலீசார் போஸ்டரை பறிமுதல் செய்ததோடு துணை கண்காணிப்பாளர் விஜய் படத்துடன் போஸ்டர் ஒட்டக்கூடாது என்று உத்தரவு போட்டுள்ளதாக கூறுகிறார்.‌ அப்போது வருங்கால முதல்வர் என்றெல்லாம் கூறி போஸ்டர் ஒட்டக்கூடாது என்று அவர்கள் கூறிய நிலையில் அப்படி போஸ்டர் அடிக்கவில்லை வெறும் புத்தாண்டு வாழ்த்து மட்டும்தான் கூறி போஸ்டர் அடித்துள்ளதாக தமிழக வெற்றி கழகத்தினர் கூறுகிறார்கள். இருப்பினும் அதனை ஏற்க மறுத்து போஸ்டரை அவர்கள் பறிமுதல் செய்ததால் போலீசாருடன் வாக்குவாதம் ஏற்பட்டது. இது தொடர்பான வீடியோவை தமிழக வெற்றிக் கழகத்தினர் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறார்கள்.

இது தொடர்பான ஒரு வீடியோ பதிவில், போஸ்டரை பார்த்து திமுகவினர் பயப்படுகிறார்கள். ஸ்காட்லாந்துக்கு இணையாக செயல்பட்டு வந்த தமிழக காவல்துறையை தற்போது வீட்டு வாட்ச்மேன்கள் போன்ற திராவிட மாடல் அரசு நடத்துகிறது என்று அதிருப்தியுடன் பதிவிட்டுள்ளனர். அதன் பிறகு மற்றொரு பதிவில் தம்மா துண்டு விஜய் அண்ணா படம் அடங்கிய போஸ்டர் ஒட்டுவது தான் தவறு. ஆனால் திமுக கட்சி கொடியை தேசிய நெடுஞ்சாலையில் பொது மக்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் விதமாக வைப்பதில் தவறு கிடையாது அப்படித்தானே என்று பதிவிட்டுள்ளனர். அதாவது திமுகவின் கொடிக்கம்பங்கள் தேசிய நெடுஞ்சாலையில் வரிசையாக நடப்பட்டுள்ள நிலையில் சில கொடிக்கம்பங்கள் சரிந்து சாலையில் கிடக்கிறது. மேலும் இது தொடர்பான வீடியோவையும் தமிழக வெற்றி கழகத்தின் ஆதரவாளர்கள் வைரல் ஆக்கி வருகிறார்கள்.