பெங்களூருவில் ஒரு 18 வயது மாணவனுக்கு நடந்த அச்சுறுத்தும் சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது விமான நிலையத்திலிருந்து தனது பிஜி ஹாஸ்டலுக்கு செல்ல ஒரு கால் டாக்சியை பிடிக்கமுடியாமல், அவசரமாக ஒரு ஏர்போர்ட் டாக்ஸியை தேர்வு செய்துள்ளார். அந்த டாக்ஸி வாகன ஓட்டுநர் முதலில் ரூ.800 எனக் கூறி வாடகைக்கு ஒப்புக்கொண்டார். ஆனால் வழியிலேயே வண்டியை நிறுத்தி, அந்த மாணவனை “ரூ.3,000 தராவிட்டால் என் நண்பர்களிடம் அழைத்து போய்விடுவேன்” என மிரட்டியதாக கூறப்பட்டுள்ளது.

இந்த தகவலை மாணவனின் சகோதரி மற்றும் ஸ்விக்கியில் தலைமை காப்பிரைட்டராக பணியாற்றும் மிருநாளி பிரியதர்ஷினி தனது வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் என்னுடைய 18 வயது தம்பி கால் டாக்ஸி புக் செய்ய முடியாததால் அவசரமாக ஏர்போர்ட் டாக்ஸியை புக் செய்தார்.

நள்ளிரவு நேரத்தில் அந்த வாகன ஓட்டுநர் 3000 ரூபாய் தராவிடில் என்னுடைய நண்பன் வீட்டிற்கு அழைத்துச் செல்வேன் என்று என்னுடைய தம்பியை மிரட்டியுள்ளார். அந்த சமயத்தில் அங்கு வந்த 2போலீஸ்காரர்களிடம் என் தம்பி இதைப் பற்றி கூறிய போது அவர்கள் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று பேசி தீர்த்துக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்று விட்டனர்.

அந்த போலீஸ்காரர்கள் உதவி செய்யாததால் என்னுடைய தம்பியை தாக்கியதோடு 3000 ரூபாய் பணத்தையும் அந்த டாக்ஸி ஓட்டுநர் பறித்துள்ளார் என்று பதிவிட்டுள்ளார். மேலும் இது விமான நிலைய அதிகாரிகள் கூறும்போது சம்பந்தப்பட்ட டாக்ஸி ஓட்டுநரை அடையாளம் கண்டு தக்க நடவடிக்கை எடுப்போம் என்று உறுதி கொடுத்துள்ளனர்.