போதை பொருள் கடத்தலில் ஈடுபட்ட ஜாபர் சாதிக் போலி பாஸ்போர்ட் பயன்படுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.

போதை பொருள் கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக் போலி பாஸ்போர்ட்டுகளை பயன்படுத்தி இருக்கக்கூடிய தகவல் ஆனது கிடைத்துள்ளது. தொடர்ந்து என்சிபி அதிகாரிகள் இந்த விவகாரத்தில் இரவு பகலாக தேடுதல் வேட்டை மற்றும்  விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் ஜாபர் சாதிக் போஸ்ட் போலி பாஸ்போர்ட் மூலமாக பல்வேறு வெளிநாடுகளுக்கு சென்று வந்திருப்பதை தற்போது அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். என்னென்ன பெயர்களை ஜாபர் சாதிக் போலி பாஸ்போர்ட் மூலம் பயன்படுத்தி உள்ளார் என்பதை என்சிபி அதிகாரிகள் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளனர். அந்த ஆதாரங்களை அவர்கள் திரட்டி உள்ளனர். எத்தனை போலி பாஸ்போர்ட்டுகளை ஜாபர் சாதிக் பயன்படுத்தினார் எனவும், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜாபர் சாதிக் சம்பந்தப்பட்ட இடங்கள், அவருடைய வீடு, அலுவலகங்கள் போன்ற இடங்களில் தொடர்ச்சியாக ஆய்வு மேற்கொண்டதில் அந்த சோதனையில் கிடைத்த பல்வேறு ஆவணங்கள் மற்றும் போலி பாஸ்போர்ட்டுகள் கிடைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தன்னுடைய சொந்த பேரில் இல்லாமல் போலியான பெயர், போலியான பாஸ்போர்ட் போன்றவற்றை பயன்படுத்தி பல வெளிநாடுகளுக்கு சென்று, அங்கிருந்து போதை பொருளை  இங்கே கொண்டு வருவதும், பல வெளிநாடுகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்து வந்திருக்கக்கூடிய தகவலும் அதிகாரிகளுக்கு தெரிய வந்துள்ளது.

எனவே அது தொடர்பான ஆதாரங்களை திரட்டி வருகின்றனர். ஒருபுறம் ஜாபர் சாதிக்கின் நெருக்கமான நண்பர்கள், திரை இயக்குனர் உள்ளிட்ட பலருக்கும் சமன் அனுப்பி விசாரணை நடத்த அவர்கள் திட்டமிட்டு வரும் நிலையில் மற்றொருபுறம் அவரது வீட்டில் இருந்து  கைப்பற்றப்பட்ட ஹார்ட் டிஸ்க்குகள், அங்கிருந்து பெறப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் பல்வேறு விஷயங்கள் ஒன்றன்பின் ஒன்றாக தேடி வருகிறது என்சிபி. ஏனென்றால் அந்த ஆதாரங்கள் தோண்ட தோண்ட அதனுடைய பின்னணி தகவல்கள் எந்த மாதிரியான முறைகேடு செய்துள்ளார் எப்படி வெளிநாட்டிற்கு சென்றார், போதை பொருளை எங்கிருந்து கொண்டு வந்துள்ளார், யாருக்கு பிரித்துக் கொடுத்துள்ளார் என பல விஷயங்களையும் அதிகாரிகள் கண்டறிந்து வருகின்றனர். அந்த வகையில் போலி போஸ்டர் பயன்படுத்தி சென்று ஜாபர் சாதிக் போலியான முகவரி பயன்படுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.