சென்னையில் புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவன் நேற்று மாலை பிராட்வே பகுதியில் தனது நண்பர்களுடன் சேர்ந்து போதை ஊசி எடுத்துக் கொண்டுள்ளார். அதன் பிறகு சிறிது நேரத்தில் சிறுவன் மயங்கி கீழே விழுந்தார். இதனைத் தொடர்ந்து மற்ற நண்பர்கள் அந்த சிறுவனை மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்ட போதும் சிறுவன் உயிரிழந்தான்.

இதனை அடுத்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் போலீசார் அங்கு வந்து பரிசோதித்ததில் சிறுவனின் பாக்கெட்டில் போதை மருந்து மற்றும் போதை ஊசி ஆகியவை இருந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.