சென்னையில் உள்ள ராயபுரம் பகுதியில் தஸ்தகீர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜாகீர் (17) என்ற மகன் இருந்துள்ளார். இவர் 10-ம் வகுப்பு முடித்த நிலையில் மேற்கொண்டு படிப்பை தொடராமல் எலக்ட்ரீசியன் ஹெல்பராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் போதை ஊசிக்கு அடிமையான நிலையில் நேற்று முன்தினம் பாரிமுனை பகுதியில் உள்ள தன்னுடைய நண்பனின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ளார்.

அப்போது ஜாகீர் உட்பட அவருடைய நண்பர்கள் 4 பேர் சேர்ந்து போதை ஊசி செலுத்தியுள்ளனர். இந்நிலையில் போதை ஊசி செலுத்திக்கொண்டு அவர் விழா முடிவடைந்ததும் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென ஜாகீர் மயக்கமாகி கீழே விழுந்த நிலையில் அவருடைய நண்பர் உடனடியாக அவரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக கூறிவிட்டனர். மேலும் இது தொடர்பாக சிறுவனின் நண்பர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.