உத்திரபிரதேச மாநிலம் ஃபிரோசாபாத் என்னும் கிராமத்தில் ரேஷ்மா (28) என்பவர் வசித்து வந்தார். இவர் 10 ஆண்டுகளுக்கு முன்பு சுர்ஜித் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். இதில்  சுர்ஜித்திற்கு  குடிக்கும் பழக்கம் இருந்ததால்  அவர் தனது மனைவியிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

என்றாவது ஒரு நாள் கணவர் திருந்தி விடுவார்..என்ற நம்பிகையுடன் 10 வருடங்களாக அவருடன் குடும்பம் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் சம்பவநாளன்று மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்த சுர்ஜித் அவரது மனைவி ரேஷ்மாவை சரமாரியாக அடித்ததுடன் கால்களை கயிற்றால் கட்டி மரக்கட்டையால் தாக்கியுள்ளார்.

அதன்பின் சுர்ஜித் ரேஷ்மாவின் அந்தரங்க பகுதியில் உருட்டுக்கட்டையை சொருகி கடுமையாக தாக்கியுள்ளார்.. அந்த மரண வலியோடு கணவனை நம்பி வந்த பெண் சம்பவ இடத்திலேயே துடித்துடித்து பரிதாபமாக உயிரிழந்தார் . இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வழக்கு பதிவு செய்தவுடன் ரேஷ்மாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதன்பின் சுர்ஜித்திடம் இச்சம்பவத்தை பற்றி விசாரணை நடத்தி வந்த நிலையில் ரேஷ்மாவின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளிவந்தது. இதில் ரேஷ்மாவின் உடலில் பல காயங்கள் இருப்பதாகவும் அவரது வயிற்றில் உருளை சுருள் (கம்பி) ஒன்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது..அந்த பெண்ணின் அந்தரங்க பகுதி வழியாக திணித்துள்ளதாக ஆய்வில் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து காவல்துறையினர் சுர்ஜித்தை அதிரடியாக கைது செய்ததுடன் அவரைக் கோட்டில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர். மேலும் ரேஷ்மாவின் சகோதரர், சுர்ஜித் மற்றும் அவரது கூட்டாளிகளின் மீது காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து காவல்துறையினர் ரேஷ்மாவின் மரணம் அவரது கணவரின் கடுமையான தாக்குதலின் விளைவாக தான் அவர் உயிரிழந்துள்ளார் என்று தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.