
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மாத்தூர் கிராமத்தில் தனவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அருள்மொழி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் இருக்கின்றனர். கடந்த அக்டோபர் மாதம் மர்மமான முறையில் தனவேல் தனது வீட்டில் இறந்து கிடந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தனவேலின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். குடிபோதையில் உணவு சாப்பிடாமல் தனவேல் இறந்து விட்டதாக அவரது மனைவி கூறியுள்ளார்.
ஆனால் பிரேத பரிசோதனை அறிக்கையில் கழுத்து நெரிக்கப்பட்டதால் மூச்சு திணறல் ஏற்பட்டு தனவேல் உயிரிழந்தது தெரியவந்தது. இதனால் போலீசார் அருள் மொழியை பிடித்து விசாரித்தனர். அப்போது அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. தன வேலுக்கும் அருள்மொழிக்கும் குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. அருள் மொழியின் தந்தை கலியமூர்த்தி கடந்த சில மாதங்களுக்கு முன்பு விஷ சாராயம் குடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அப்போது தனது தந்தையை பார்ப்பதற்காக சரவணன் என்பவரது ஆட்டோவில் அருள்மொழி அடிக்கடி மருத்துவமனைக்கு சென்று வந்துள்ளார்.
இதனால் சரவணனுக்கும் அருள்மொழிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ள காதலாக மாறியது. இதனை அறிந்த தனவேல் தனது மனைவியைக் கண்டித்துள்ளார். இதனால் கோபம் அடைந்த அருள்மொழி சரவணன் உடன் இணைந்து தூங்கிக் கொண்டிருந்த தனவேலின் முகத்தில் தலையணையால் வைத்து அழுத்தியும், கழுத்தை நெரித்தும் கொலை செய்துள்ளனர். அதன் பிறகு ஒன்றுமே தெரியாதது போல அருள்மொழி நாடகமாடியது தெரியவந்தது. இதனால் அருள் மொழியையும் சரவணன் போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.