தமிழகத்தில் போதை கலாச்சாரம் தலை தூக்கும் சூழலில் பீடி, சிகரெட், மது மற்றும் கஞ்சாவுக்கு மாற்றாக வழி நிவாரணி மாத்திரைகள் மூலம் இந்த கால இளசுகள் போதையை அனுபவிக்கின்றனர். இதை சாதகமாக பயன்படுத்தும் மருந்து விற்பனை நிறுவனங்கள் அதிக விலைக்கு வலி நிவாரணி மாத்திரைகளை விற்பனை செய்கின்றன.

இது தொடர்பாக அரசு ஆய்வு நடத்திய நிலையில் விதிமீறலில் ஈடுபட்டதாக கடந்த ஆறு மாதத்தில் 117 நிறுவனங்களின் உரிமத்தை தமிழக அரசு ரத்து செய்துள்ளதாக அறிவித்துள்ளது. அதே சமயம் மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமல் இது போன்ற மாத்திரைகளை விற்பனை செய்யக்கூடாது என்று அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.