
கோவாவில் சிறுவனும், ஒரு காகமும் இணைந்து கால்பந்து விளையாடும் அரிய காட்சி இணையத்தை அதிரவைத்து வருகிறது. இந்த வீடியோவை @thegoanonline என்ற சமூக ஊடக கணக்கு X-ல் பகிர்ந்துள்ளது.
“தெற்கு கோவாவில் சிறுவனுடன், ஒரு காகம் கால்பந்து விளையாடுவதைப் பார்க்க முடிகிறது. இது எவ்வளவு அழகாக இருக்கிறது!” என்ற தலைப்புடன் பதிவேற்றப்பட்ட இந்த வீடியோ, நெட்டிசன்களின் இதயங்களை வென்றுள்ளது.
In a rare video, a crow is seen playing #football with a child somewhere in South Goa pic.twitter.com/jVynpLGC0V
— The Goan 🇮🇳 (@thegoanonline) May 20, 2025
வீடியோவில், ஒரு சிறுவன் மெதுவாக ஒரு காகத்தை நோக்கி பந்தை பாஸ் செய்கிறான். அதற்கு பதிலாக, காகம் தனது அலகைப் பயன்படுத்தி பந்தை மீண்டும் அவனை நோக்கி தள்ளி உற்சாகமாக விளையாடுகிறது.
இந்த வீடியோ இதுவரை 27,000 பார்வைகளை கடந்துள்ளதுடன், பெரும் எண்ணிக்கையிலான நெட்டிசன்களின் சிரிப்பையும் பாராட்டையும் பெற்றுள்ளது. “இந்த காகம் முந்தைய ஜென்மத்தில் ஒரு சூப்பர் ஸ்டார் ஸ்ட்ரைக்கர்தான்!” என ஒருவர் கூற “தெற்குக் கோவாவில் இருந்து ஞாயிறு போட்டிக்கு இவனை எடுத்து வரலாமா?” என்ற நகைச்சுவை கருத்துக்களும் பகிரப்பட்டன.