மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் பகத் பாஸில். இவர் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடித்து வருகிறார். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் கூட்டம் இருக்கும் நிலையில் ஹீரோ, வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் நடித்து அசத்துவேன் என்கிற விதத்தில் ஒரு திறமையான நடிகராக வலம் வருகிறார்.

இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான புஷ்பா 2 திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அந்தப் படத்தில் வில்லனாக நடித்திருந்தார். இந்நிலையில் தற்போது தமிழ் சினிமாவில் பகத் பாசில் மாரிசன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் நடிகர் வடிவேலு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நிலையில் இவர்கள் இருவரும் ஏற்கனவே மாமன்னன் திரைப்படத்திலும் இணைந்து நடித்தது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தை சுதீஷ் சங்கர் இயக்கியுள்ள நிலையில் யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். இந்த படத்தின் சூட்டிங் நிறைவடைந்துள்ள நிலையில் தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மாரிசன் திரைப்படம் ஜூலை மாதம் ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் தற்போது படத்தின் டீசர் வீடியோவை பட குழு வெளியிட்டுள்ளது. மேலும் இந்த வீடியோ தற்போது ரசிகர்களுக்கு கவர்ந்து சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாகி வருகிறது.