கன்னட சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் யஷ் கேஜி எஃப் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானார். அவருக்கு தற்போது இந்தியா முழுவதும் ஏராளமான ரசிகர்கள் இருக்கும் நிலையில் அவருடைய அடுத்த படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
தற்போது கீது மோகன் தாஸ் இயக்கத்தில் தன்னுடைய கனவு படமான டாக்சிக் என்ற திரைப்படத்தில் யஷ் நடித்துவரும் நிலையில் அவருடைய 40-வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த படம் பான் இந்தியா மொழிகளில் வெளியாக இருக்கும் நிலையில் 5 மொழிகளிலும் தற்போது டீசர் வெளியானது. இந்த படம் வருகிற மார்ச் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. மேலும் இந்த வீடியோ ரசிகர்களை கவர்ந்த மிகவும் வைரலாகி வருகிறது.
It’s Gonna Get Crazyyyy !!!#ToxicTeaser Out now!
Kannada – https://t.co/UTLyUWmDVn
Hindi – https://t.co/XDSCoKkM8N
Telugu – https://t.co/T5O6bZlVDv
Tamil – https://t.co/2791WiqPGd
Malayalam – https://t.co/CM9pkqutTU#Toxic In Cinemas Worldwide from 19-03-2026#ToxicTheMovie… pic.twitter.com/iOiOLNv2bW— Yash (@TheNameIsYash) February 20, 2026
இந்த படத்தில் நடிகைகள் நயன்தாரா, கியாரா அத்வானி, ஹூமா குரோசி, ருக்மணி வசந்த் உள்ளிட்ட பல நடிகைகள் மிரட்டலான வேடங்களில் நடிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
