
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்ற நிலையில் 300 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை புரிந்தது. இந்த படத்தை சுகுமார் இயக்கி இருந்த நிலையில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்க நடிகை ஸ்ரீ லீலா ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார். இரண்டாம் பாகம் பிரம்மாண்டமாக உருவான நிலையில் கடந்த 6-ம் தேதி வெளியாகி வசூல் வேட்டை நடத்தி வருகிறது.
இந்நிலையில் படம் ரிலீஸ் ஆகி தற்போது 6 நாட்கள் ஆகும் நிலையில் 1002 கோடி ரூபாய் வசூல் சாதனை புரிந்துள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்திய சினிமாவில் மிக குறைந்த நாட்களில் அதிக வசூல் வேட்டை நடத்திய திரைப்படம் என்ற பெருமையை புஷ்பா 2 பெற்றுள்ளது. மேலும் படம் ரிலீஸ் ஆகி 6 நாட்கள் மட்டுமே ஆகும் நிலையில் இனி வரும் காலத்தில் 2000 கோடி வரை வசூல் சாதனை புரிய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.