தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித்குமார். இவர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் தன்னுடைய 63வது படமான குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள நிலையில் த்ரிஷா ஹீரோயினாக நடித்துள்ளார். அதன்பிறகு பிரசன்னா, அர்ஜுன் தாஸ், பிரபு உள்ளிட்ட பலரும் முக்கிய வே்டங்களில் நடிக்கிறார்கள்.

இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் நிலையில் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் செகண்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் படம் ஏப்ரல் 10-ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியான நிலையில் தற்போது மேக்கிங் வீடியோவை பட குழு வெளியிட்டுள்ளது. மேலும் இந்த வீடியோ தற்போது ரசிகர்களை கவர்ந்து சோசியல் மீடியாவில் மிகவும் வைரல் ஆகி வருகிறது.