ஹாலிவுட் சினிமாவின் புகழ் பெற்ற இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் அவதார் திரைப்படங்களின் இரண்டு பாகங்கள் வெளிவந்து உலகம் முழுவதும் வசூல் சாதனை புரிந்து வெற்றி நடை போட்டது. இந்தப் படங்களைத் தொடர்ந்து தற்போது அவதார் 3 உருவாகியுள்ளது. இந்த படத்தை அவதார் தி ஃபயர் அண்ட் ஆஷ் என்ற தலைப்பில் அவர் இயக்கியுள்ளார்.

இந்த படத்தின் முதல் கட்ட போஸ்டர் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. இது நெருப்பு மற்றும் சாம்பல் என்ற கருப்பொருளை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் பண்டோரா கிரகத்தின் பின்புறம் உருவாகியுள்ளது. இது ரசிகர்களை ஒரு மாயாஜால உலகத்திற்கு அழைத்து செல்கிறது. மேலும் இந்த திரைப்படம் டிசம்பர் 19ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் நிலையில் தற்போது ட்ரெய்லர் வீடியோ நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.