தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் நிதின் தற்போது ராபின்ஹூட் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் நடிகை ஸ்ரீலிலா ஹீரோயின் ஆக நடித்துள்ள நிலையில் டேவிட் வார்னர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். பிரபல கிரிக்கெட் வீரரான டேவிட் வார்னர் நடித்துள்ள முதல் திரைப்படம் இதுவாகும்.

இந்த படத்தை வெங்கி குடுமுலா எழுதி இயக்கியுள்ளார். இந்தத் திரைப்படம் வருகிற 28ஆம் தேதி வெளியாகும் நிலையில் இந்த படத்தின் நிகழ்ச்சி  ஹைதராபாத்தில் நடைபெற்ற ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் நடிகர் நிதின், நடிகை ஸ்ரீ லீலா மற்றும் டேவிட் வார்னர் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.

அப்போதுநடிகை ஸ்ரீலிலா உடன் சேர்ந்து டேவிட் வார்னர் நடனமாடிய வீடியோ சமூக வலைதளத்தில் டிரெண்டாகி வருகிறது. இந்நிலையில் மார்ச்28ஆம் தேதி இந்த  திரைப்படம் வெளியாகும் நிலையில் தற்போது ட்ரெய்லரை பட குழுவினர் வெளியிட்டுள்ளனர். மேலும் இந்த ட்ரெய்லர் வீடியோ ரசிகர்களை கவர்ந்து சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.