
ரயில்வே துறையில் பயணிகள் எதிர்பார்த்த புதிய சலுகை இன்று முதல் நடைமுறையில் வந்துள்ளது. அதன்படி, ரயிலில் 2ஆம் வகுப்பு ஏசி மற்றும் 3ஆம் வகுப்பு ஏசி பெட்டிகளில் டிக்கெட்டுகள் புக் ஆகாமல் காலியாக இருப்பின், செகண்ட் ஸ்லீப்பரில் டிக்கெட் புக் செய்து வெயிட்டிங் லிஸ்டில் இருப்பவர்களுக்கு, கூடுதல் கட்டணம் ஏதும் இன்றி அதே டிக்கெட்டில் ஏசி பெட்டிகளில் பயணிக்க வசதியாக ஆட்டோ அப்கிரேடேஷன் வசதி வழங்கப்படும்.
முன்னதாக இந்த வசதி சில ரயில்களில் மட்டும் இருந்தது. ஆனால் தற்போது இந்த புதிய அறிவிப்பின் மூலம், வைகை எக்ஸ்பிரஸ் மற்றும் பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயில்களிலும் இந்த ஆட்டோ அப்கிரேடேஷன் நடைமுறையில் வருவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
இதன்மூலம், ரயிலில் இடம் கிடைக்காமல் காத்திருப்பவர்களுக்கு ஏசி வகுப்பு பெட்டிகளில் பயணிக்க வாய்ப்பு கிடைக்கும். குறிப்பாக, பண்டிகை மற்றும் முகூர்த்த நாட்களில் டிக்கெட் புக் செய்வதில் சிக்கல் ஏற்படக்கூடிய சூழலில் இந்த அறிவிப்பு பயணிகளுக்கு பெரிதும் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தெற்கு ரயில்வே தனது சேவைகளை மேம்படுத்த பல புதிய முயற்சிகளை எடுத்து வருகிறது. ரயில்வே ஸ்டேஷன்கள் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. கோடை கால சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
அதேபோல், இப்போது பயணிகளின் நலனுக்காக ஆட்டோ அப்கிரேடேஷன் மூலம் கூடுதல் வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த வசதி ரயிலில் டிக்கெட் கிடைக்காதவர்களுக்கும் ஏசி பயண அனுபவம் கிடைக்கச் செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. புதிய அறிவிப்பு பயணிகள் மத்தியில் பரவலாக வரவேற்பை பெற்றுள்ளது.