
வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடித்த விடுதலை திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது. இந்த படத்தின் இரண்டாவது பாகம் கடந்த 20ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீசானது. மக்களுக்காக போராடிய ஆனாலும் மக்களுக்கே தெரியாத தலைவர்கள் பற்றி இந்த படம் கூறியுள்ளது.
விடுதலை 2 திரைப்படத்தில் சூரி, விஜய் சேதுபதி, பிரகாஷ்ராஜ், சேத்தன், இளவரசு, மூணார் ரமேஷ், பாலாஜி சக்திவேல், மஞ்சு வாரியர், கிஷோர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இந்த நிலையில் விடுதலை 2 பட குழுவினர் இசைஞானி இளையராஜாவை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அந்த போட்டோ சோஷியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது.