
டோக்கியோவில் இருக்கும் அரசு அலுவலகங்களில் பிறப்பு விகிதத்தை அதிகரிப்பதற்காக வாரத்தில் நான்கு நாட்கள் மட்டுமே வேலை செய்யும் நடைமுறை கொண்டுவரப்பட உள்ளது. வருகிற 2025-ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் இந்த திட்டம் செயல்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஊழியர்கள் குடும்பத்துடன் அதிக நேரம் செலவிடுவர். அவர்கள் உடல் மற்றும் மனதளவில் ஆரோக்கியமாக இருப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.