தமிழகத்தில் போக்குவரத்து துறையில் காலியாக உள்ள பணியிடங்களை விரைவில் நிரப்பப்பட உள்ளதாகவும் அதற்கு தேர்வு நடத்தப்படும் என்பதால் அந்த தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பங்களை பெற தகவல் தொழில்நுட்பத்துறை உதவியுடன் புதிய மென்பொருள் உருவாக்கும் பணி நடைபெற்று வருவதாக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். இந்த பணிகள் முடிவடைய மூன்று அல்லது நான்கு மாதங்கள் ஆகும் என்பதால் அதன் பிறகு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு தகுதியுள்ள பணியாளர்கள் நியமனம் செய்யப்படுவார்கள்.

அதேசமயம் முதல் முறையாக தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் போக்குவரத்து கழக கோட்ட தலைமை அலுவலகத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஓய்வு எடுக்க குளிர்சாதன வசதியுடன் கூடிய ஓய்வு வரை திறந்து வைக்கப்பட்டது. மேலும் தமிழகத்தில் புதிதாக 2000 பேருந்துகள் வாங்க டெண்டர் பணிகள் நடைபெற்று வருவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.