
தமிழகத்தில் பொதுவாக பண்டிகை தினங்களில் அசம்பாவித சம்பவங்களை தடுப்பதற்காக டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை வழங்கப்படுவது வழக்கம். குறிப்பாக தீபாவளி பண்டிகை, சுதந்திர தினம், குடியரசு தினம் போன்ற பல முக்கிய பண்டிகை தினங்களில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை வழங்கப்படும். அதேபோன்று முக்கிய தலைவர்களின் ஜெயந்தி விழாக்களிலும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை வழங்கப்படுவது வழக்கம்.
அந்த வகையில் தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசாங்கம் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை வழங்கப்படுவதாக அறிவித்துள்ளது. அதன்படி ஜனவரி 14ஆம் தேதி பொங்கல் பண்டிகை மற்றும் ஜனவரி 15ஆம் தேதி திருவள்ளுவர் தினம் அங்கு இரு தினங்களிலும் டாஸ்மாக் கடைகள் செயல்படாது என்று அறிவித்துள்ளது. மேலும் இதே போன்று ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தின விழாவை முன்னிட்டும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.