பொங்கல் பண்டிகை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. தாம்பரம்- திருநெல்வேலி சிறப்பு ரயில் ஆனது இயக்கப்படவுள்ளது. அதேபோல தாம்பரம் – தூத்துக்குடி இடையேயும் முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்பட இருக்கிறது. தாம்பரம் -திருநெல்வேலி இடையே ஜனவரி 11,13, 16 தேதிகளில் தாம்பரத்திலிருந்து இரவு 9:30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 11.15 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும். திருநெல்வேலி – தாம்பரம் இடையே ஜனவரி 12, 14, 17 தேதிகளில் பிற்பகல் 2.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 3:15 மணிக்கு தாம்பரம் சென்று அடையும்.

இந்த சிறப்பு ரயில் செங்கல்பட்டு, விருத்தாச்சலம், திருச்சி, திண்டுக்கல், சங்கரன்கோவில் சேரன்மகாதேவி வழியாக இயக்கப்படுகிறது. தாம்பரத்திலிருந்து காலை 7:30 மணிக்கு புறப்பட்டு இரவு 10. 45 மணிக்கு தூத்துக்குடி சென்றடையும்.

தூத்துக்குடி- தாம்பரம் இடையே இயக்கப்படும் முன்பதிவு இல்லா சிறப்பு ரயிலானது ஜனவரி 15 மற்றும் 17 தேதிகளில் தூத்துக்குடியில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு இரவு 8:30 மணிக்கு தாம்பரம் சென்றடையும். இந்த சிறப்பு ரயில் செங்கல்பட்டு, திண்டிவனம், விழுப்புரம், கடலூர், திருச்சி, சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, சாத்தூர், கோவில்பட்டி வழியாக இயக்கப்படுகிறது.