வடமாநிலத்தவர்கள் அதிக அளவில் தமிழகம் வருவது ஒருவித போர் தொடுப்புதான். இதில் பாஜகவின் பின்புலம் உள்ளது என நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது கடலுக்குள் அரை ஏக்கர் நிலத்தில் பேனா சிலை வைக்கப் போகிறார்கள். முன்பே கருணாநிதிக்கு சிலை வைத்திருக்கிறார்கள். அது அவருடைய எழுத்தை மற்றும் பேனாவை நினைவூட்டாதா?… இல்லையெனில் ஏன் சிலையை வைத்திருக்கிறீர்கள்?

அதுபோல மதுரையில் கருணாநிதி பெயரில் நூலகம் வைத்திருக்கின்றனர். கடலில் பேனா நினைவுச்சின்னம் வைக்க நடவடிக்கை எடுத்தால் நான் போராட்டத்தை தொடங்குவேன் என்று சீமான் கூறியுள்ளார். மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடாக தமிழக அரசு 20,000 அறிவித்துள்ளது மிகவும் குறைவானது என்றும் கூறினார்.