மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவாக மெரினாவில் கடலுக்கு நடுவே பேனா சின்னம் அமைப்பதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

திமுக அரசு சார்பில் மெரினா கடற்கரையில் ரூபாய் 80 கோடி மதிப்பீட்டில் பேனா வடிவில் நினைவுச் சின்னம் அமைக்கப்படும் என்று அறிவித்திருந்தது. இந்த திட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் சில எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் மெரினாவில் கடலுக்கு நடுவே பேனா சின்னம் அமைப்பதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது,

முன்னதாக கடலில் பேனா சிலை அமைப்பதற்கு சுற்றுச்சூழல் துறையிடம் தமிழக அரசு அனுமதி கோரியிருந்தது. தற்போது இதற்கு சில நிபந்தனைகளுடன் சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக்குழு அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து விரைவில் இதற்கான பணி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.