உலகிலேயே மிகக் கொடிய நோய்களில் மிக முக்கியமான ஒன்று மாரடைப்பு ஆகும். எவ்வளவு கொடிய நோயாக இருந்தாலும் அதிலிருந்து தப்பித்து விடலாம் ஆனால் மாரடைப்பு வந்தால் அடுத்த நொடியே உயிர் போய்விடுகிறது. ஒருசிலரோ குறிப்பிட்ட நேரத்தில் சரியான முதலுதவி சிகிச்சை கொடுப்பதால் உயிர் பிழைக்கிறார்கள். சமீபகாலமாகவே இந்தியாவில் நாளுக்கு நாள் மாரடைப்பால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

அந்தவகையில் உ.பி, நொய்டா செக்டார் 21 ஏவில் உள்ள ஸ்டேடியத்தில் 52 வயதான நபர் பேட்மிண்டன் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அவர் திடீரென சுருண்டு விழுந்தார். உடனே, சக விளையாட்டு வீரர்கள் ஸ்டேடியம் நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி, ஆம்புலன்சு வரவழைக்கப்பட்டு அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் மாரடைப்பால் ஏற்கனவே இறந்ததாக தெரிவித்தனர்.