துலீப் கோப்பை 2026 தொடரின் இறுதிப்போட்டியில் தெற்கு மண்டல அணிக்கு எதிராகக் களம் கண்ட கிழக்கு மண்டல அணி, முதல் இன்னிங்ஸில் 708 ரன்கள் குவித்து இமாலய பலத்துடன் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

இந்த போட்டியில் கிழக்கின் பேட்டிங் அதிரடியைத் தாண்டி, 15 வயதே ஆன இளம் வீரர் வைபவ் சூரியவன்ஷியின் கூர்மையான கிரிக்கெட் புத்தி கூர்மை மற்றும் டி.ஆர்.எஸ் (DRS) உள்ளுணர்வு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. தெற்கு மண்டல அணியின் தொடக்க வீரர் ரிக்கி பூய் அடித்த பந்தை முகேஷ் குமார் வீசியபோது எட்ஜ் ஆகியும் கள நடுவர் அவுட் தர மறுத்த நிலையில், ஸ்லிப்பில் நின்றிருந்த வைபவ் “கண்டிப்பாக அவுட் தான், ரிவ்யூ எடுங்கள்” என கேப்டன் இஷான் கிஷனைத் தொடர்ந்து வற்புறுத்தி ரிவ்யூ எடுக்க வைத்தார்.

அல்ட்ரா எட்ஜ் சோதனையில் அது தெளிவான எட்ஜ் என உறுதியாகி தீர்ப்பு மாற்றப்பட்டதால் பூய் ஆட்டமிழந்தார்.

“>

அடுத்தடுத்து தேவ்தத் படிக்கல் விஷயத்தில் இரண்டாவது ரிவ்யூ தவறினாலும், ஒரு சிறுவனின் இந்த அதிரடி விழிப்புணர்வும், களத்தில் கேப்டனையே தன் சாதுரியத்தால் முடிவெடுக்க வைத்த ஆளுமையும் இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் பாராட்டைப் பெற்று வருகிறது.