இன்றைய காலகட்டத்தில் செல்போன் பயன்பாடு என்பது அதிகரித்து விட்டது. இன்னும் சொல்லப்போனால் பிறந்த குழந்தை முதல் முதியோர்கள் வரை அனைவரும் செல்போன் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக குழந்தைகளுக்கு பெற்றோர்கள் பெரும்பாலும் செல்போன்களை கொடுத்து பழக்கி விடுகின்றனர். வீட்டில் தங்களை தொந்தரவு செய்யாமல் இருக்க குழந்தைகளுக்கு செல்போன் கொடுத்து விடுகிறார்கள்.

இதனால் குழந்தைகளின் உடல்நலம் பெரிதும் பாதிக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளது. இந்நிலையில் பெற்றோர்களுக்கு சியோமி முன்னாள் இந்திய தலைவர் மனு குமார் ஜெயின் முக்கிய அறிவுறுத்தல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது இந்தியாவில் குழந்தைகள் தூங்குவதற்கு,சாப்பிட மற்றும் அழாமல் இருக்க என அனைத்திற்கும் ஸ்மார்ட் போன் கொடுத்து அவர்களின் எதிர்கால மனநலத்துடன் பெற்றோர்கள் விளையாடுகிறார்கள். பத்து வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு செல்போன் கொடுக்காமல் சக குழந்தைகளுடன் பழகும் படி செய்யுங்கள் என அவர் அறிவுறுத்தியுள்ளார்.