
திரைப்பட தயாரிப்பாளர் ராஜ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் எம்.ராமநாதன் உடல் நலக்குறைவு காரணமாக இன்று உயிர் இழந்தார். இவருக்கு 72 வயதாகிறது. சத்யராஜின் மேலாளராக எம்.ராமநாதன் பல ஆண்டுகளாக வேலை பார்த்துள்ளார்.
சத்யராஜ் நடித்த வாத்தியார் வீட்டுப்பிள்ளை, நடிகன், வள்ளல், திருமதி பழனிச்சாமி, பிரம்மா உடன்பிறப்பு, வில்லாதி வில்லன் ஆகிய படங்களை எம்.ராமநாதன் தயாரித்தது குறிப்பிடத்தக்கதாகும். அவரது இறப்பிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.