
பிரபல நடிகர் ஜி.சீனிவாசன்(95) உடல் நலக்குறைவு காரணமாக இன்று உயிரிழந்தார். இயக்குனர், எழுத்தாளர், நடிகர் என பன்முகத் திறமை கொண்டவர் சீனிவாசன். இவர் முரட்டுக்காளை, வாழ்வே மாயம், ஸ்ரீ ராகவேந்திரா, மனிதன், ராஜாதி ராஜா, உரிமை கீதம், ஐயா வேங்கை உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் இதுவரை 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து திரை உலகில் தனக்கென ஒரு தனி இடம் பிடித்துள்ளார். இன்று உடல்நலக் குறைவு காரணமாக ஜி.சீனிவாசன் உயிரிழந்தார். இவரது இறப்பிற்கு திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இவரது மனைவி பிரபல நடன இயக்குனர் புலியூர் சரோஜா என்பது குறிப்பிடத்தக்கதாகும்.