
பிரபல நடிகரான கவுண்டமணி 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். கவுண்டமணி, செந்தில் இணைந்து நடித்த காமெடி காட்சிகளுக்கு இன்றும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். கவுண்டமணி ரஜினிகாந்த், கமல், விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான படத்தில் நடித்துள்ளார்.
இந்த நிலையில் கவுண்டமணியின் மனைவி சாந்தி(67) உடல்நலக்குறைவால் இன்று உயிரிழந்தார். சென்னை தேனாம்பேட்டையில் இருக்கும் இல்லத்தில் இறுதி சடங்குக்காக அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது. அவரது இறப்பிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.