சிபிஎம் மூத்த தலைவர் கா.சின்னையா உடல் நலக்குறைவால் காலமானார். இவருக்கு 75 வயது ஆகிறது. கடந்த 1973-ஆம் ஆண்டு சின்னையா கட்சியில் சேர்ந்தார். இவர் DYFI சங்கத்தை வளர்த்தெடுத்ததில் முக்கியமானவர்.

சின்னையா தென் சென்னை மாவட்ட செயலாளராகவும் இருந்துள்ளார். சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம் உள்ளிட்ட தலைவர்கள் சின்னையாவின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளனர். சின்னையாவின் உடல் சென்னை மருத்துவக் கல்லூரிக்கு தானமாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.