நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது திமுக பெரியார் மண் இது என்று கூறுகிறார்களே என்று  செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு சீமான் கூறியதாவது, இது சேர, சோழ, பாண்டிய‌மண், வேலு நாச்சியார் மண், பூலிதேவர் மண், முத்துராமலிங்கம் மண், காமராஜர்‌மண். ஆனால் பெரியாரை ஒரு மண்தான் என்று கூறினார். அதோடு எங்களுக்கு இது பெரியார் மண் கிடையாது எனவும் தமிழ்மண் என்றும் கூறினார்.

மேலும் சீமான் தொடர்ந்து பெரியாரைப் பற்றி விமர்சித்து வருகிறார். முன்னதாக பெரியார் பாலியல் இச்சை வரும்போதெல்லாம் தாய் மகள் மற்றும் சகோதரிகளுடன் உடலுறவு கொள்ளுங்கள் என்று கூறியதாக கூறினார். அதன் பிறகு தாலியை அறுத்து எறியுங்கள் என்று பெரியார் கூறியது போன்று கர்ப்பப்பையையும் அவர் அறுத்து எறியுங்கள் என்று கூறிய நிலையில் அதை மட்டும் செய்யாதது ஏன் என்று கூறினார். சீமான்  தொடர்ந்து பெரியார் பற்றி சர்ச்சையாக பேசி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.