கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள மால்கள், கடைகள் மற்றும் ஹோட்டல்களின் பெயர் பலகைகளில் 60 சதவீதம் கன்னட மொழியில் இருக்க வேண்டும் என்று மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. அதற்காக வருகின்ற பிப்ரவரி மாதம் வரையில் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. உத்தரவை மீறினால் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது. இந்த அறிவிப்பால் கர்நாடகாவில் மொழி பிரச்சனை தொடர்பான மோதலை ஏற்படுத்தும் சூழல் ஏற்பட்டுள்ளது.