ஒரு நிறுவனத்தின் பெண் CEO, தன்னை மேடம் என அழைக்காமல் நேரடியாக பெயரால் அழைத்ததற்காக, தனது பணியாளருக்கு “பள்ளி பாணியில்” தண்டனை விதித்த சம்பவம் இணையத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் குறித்து ரெடிட்டில் “Got asked to write a line 100 times as punishment” என்ற தலைப்பில் ஒரு பதிவு வெளியாகி வைரலாகியுள்ளது.

பதிவில், ஒரு ஊழியர் கூறியதாவது, “எங்கள் CEO-வை ஒருவர் மேடம் என அழைக்காமல் நேரடியாக பெயரால் அழைத்தார். CEO-வின் பெயரை குறிப்பிட்டு இன்றைய மீட்டிங் எப்போது?” என கேட்டதற்காக, அந்த மூத்த ஊழியரிடம் ‘I will not call you by your name’ என்ற வரியை 100 முறை எழுதுமாறு கூறினார்.

அது பள்ளியில் தரப்படும் தண்டனை மாதிரியே இருந்தது. அந்த மூத்த ஊழியர் எழுதி CEOக்கு EOD-ல் சமர்ப்பித்தார் என கூறியுள்ளார். இந்த சம்பவம் இணையத்தில் பரவியதும், பல நெட்டிசன்கள் கடும் விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர். ஒருவர், “நான் இருந்திருந்தால் ‘I Quit’ என்ற ஒரே வரியைத்தான் எழுத்திருப்பேன்” என்றார்.

மற்றொருவர், “இது என் ராஜினாமா” என எழுதியிருப்பேன் என கூறியுள்ளார். பலரும் இந்த CEOவின் செயலை தொழில்முறை ஒழுக்கமற்றதென கண்டித்துள்ளனர். மேலும், சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் பெயரை கேட்க, அதற்குத் தெளிவான பதில் தரப்படவில்லை.