முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தில் இணைந்து 18 வயது நிரம்பியும் முதிர்வு தொகை கிடைக்காத பயனாளிகள் வருகின்ற அக்டோபர் 25ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டப்படி ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் 25 ஆயிரம் ரூபாய், இரண்டு பெண் குழந்தைகள் இருந்தால் 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது.

இந்த தொகை அவர்களின் வங்கிக்கணக்கில் மொத்தமாக செலுத்தப்படும் நிலையில் இந்த வைப்புத் தொகை ஒவ்வொரு ஐந்து ஆண்டு முடிவிலும் புதுப்பிக்கப்பட்ட 18 வயது நிரம்பியதும் அப்போதைக்குரிய திரட்டப்பட்ட வட்டி விகிதத்துடன் கல்வி ஊக்க தொகையுடன் கூடிய நிலையான வயசு தொகையின் முதிர்வு தொகை காசோலையாக பெறப்பட்டு அந்த குழந்தைகளுக்கு மாவட்ட சமூக நலத்துறை மூலம் வழங்கப்படும். இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க நாளை கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.