பெண் குழந்தைகளுடைய எதிர்காலத்திற்கு பெற்றோர்கள் சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்ய நினைக்கிறார்கள். அந்த வகையில் பெண் பிள்ளைகளுக்காக சுகன்யா சம்ரிதி யோஜனா எனப்படும் செல்வ மகள் சேமிப்பு திட்டம் செயல்பட்டு வருகிறது. இந்த திட்டமானது பேட்டி பச்சாவோ பேட்டி பதாவோ என்ற இந்திய அரசின் கூட்டு முயற்சியின் ஒரு பகுதியாக செயல்பட்டு வருகிறது.

இது பெண் குழந்தைகளுடைய கல்வி மற்றும் திருமணத்திற்கான செலவிற்கு உதவி புரிகிறது. இந்த திட்டத்தில் 10 வயதுக்கு குறைவாக உள்ள பெண் குழந்தைகளின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் யாரேனும் சேரலாம். இந்த திட்டத்தின் கீழ் ஒருவர் குறைந்தபட்ச தொகையாக ஆயிரம் ரூபாய் அதிகபட்சம் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் டெபாசிட் செய்யலாம்.