சென்னை திருவொற்றியூரில் சாலையில் சென்ற பெண்ணை மாடுமுட்டி இழுத்துச் சென்ற சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூரில் மதுமதி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டிற்கு அருகில் இருக்கும் உறவினரை பார்ப்பதற்காக நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு எருமை மாடு பெண்ணை முட்டி தூக்கி இழுத்துச் சென்றது. அந்த பெண்ணை காப்பாற்ற சென்ற சந்திரசேகர் என்பவரையும் மாடு தாக்கியுள்ளது.

தலை,கால் உள்ளிட்ட பகுதிகளில் படுகாயம்டைந்த மதுமதிக்கு 20 தையல்கள் போடப்பட்டுள்ளது. மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பெண்ணை தாக்கிய எருமை மாட்டை மாநகராட்சி அதிகாரிகள் பிடித்தனர். இந்நிலையில் மாட்டின் உரிமையாளர் யார் என்பது குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.